இந்தோனேசியாவில் மிகவும் ஆபத்தான மெராபி (குனுங் மெராபி) எரிமலையானது நேற்று வெடித்து தீப்பிழம்பை கக்கியதுடன் சாம்பல் படலங்களை உருவாக்கியுள்ளது.

இதனையடுத்து இந்தோனேசியாவின் ஜகார்த்தாவின் சில கிராமங்களில் சாம்பல் மழை பெய்துள்ளது.

3 ஆயிரம் அடி உயரத்திற்கு 270 விநாடிகளில் 75 மில்லி மீற்றர் அளவிலான கரும்புகை வெளிக்கிழம்பியுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புக் காரணமாக, வெளியேறியுள்ளனர்.