மெல்பேர்னில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள வலதுசாரி பயங்கரவாதியொருவர் தான் மெல்பேர்னின்  முக்கிய பகுதிகளில் காணப்படும் மக்களின் கழுத்தை துண்டிக்க விரும்பியதாக தெரிவித்துள்ளார்.

மெல்பேர்னின் மூன்று முக்கிய இலக்குகளை தாக்க திட்டமிட்டார் என கைதுசெய்யப்பட்டுள்ள பிலிப் கலியா என்பவரே இவ்வாறு தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்தார் என  அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் 2016 இல் மெல்பேர்ன் நகரத்தில் உள்ளவர்களின் கழுத்துக்களை வெட்டவிரும்புகின்றேன் என தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்தார் என அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எனது பாதையில் இடதுசாரிகள் பலரின் உடல்களை பார்க்கவிரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்ட நபர் தெரிவித்தார் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

 பிலிப் கலியாவை  இல் அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பின்னர் காவல்துறையினர் கைதுசெய்திருந்தனர்.

மெல்பேர்னின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டார் என காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தனர்.

ஏனையவர்கள் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு உதவும் விதத்தில் இந்த நபர் கையேடு ஒன்றை தயாரித்திருந்ததுடன் குண்டுகளை தயாரிப்பது எவ்வாறு என அதில் குறிப்பிட்டிருந்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரீகிளெய்ம் அவுஸ்திரேலியா என்ற வலதுசாரி அமைப்பை சேர்ந்தவரான சந்தேகநபர் இடதுசாரிகளையும் முஸ்லீம்களையும் இலக்குவைக்க திட்டமிட்டிருந்தார் என அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற விசாரணைகள் தொடர்கின்றன.