உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 25 ஆவது முறையாகவும் பதக்கத்தை வெற்றிகொண்ட அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் நிகரற்ற சாதனையாளராக முத்திரை பதித்துள்ளார்.

22 வயதான சிமோன் பைல்ஸ் 24 ஆவது பதக்கத்தை வெற்றிகொண்டபோது பெலாரஸ் வீரர் விடாலி ஷெர்போவின் சாதனையை (23 பதக்கம்) முறியடித்து உலக அளவில் முதலிடம் பிடித்தார்.

2013 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் தனது பதக்க வேட்டையை தொடங்கிய சிமோன் பைல்ஸ் இதுவரை 19 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வெற்றிகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.