இலங்கை கிரிக்கெட்டில் இனி திலங்க எந்த பதவியும் வகிக்க முடியாது- உத்தியோகபூர்வமாக தடையை அறிவித்தார் ஹரீன்

Published By: Rajeeban

15 Oct, 2019 | 11:49 AM
image

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் திலங்கசுமதிபால எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் நிர்வாகத்தில் எந்த வித  பதவிகளையும் விதிக்க முடியாதென  இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ உத்தியோகபூர்வ தடையை விதித்துள்ளார்.

அமைச்சர் ஹரீன்பெர்ணான்டோ நியமித்த மூவர் கொண்ட குழுவின் பரிந்துரைக்கு அமையவே இந்த தடையை விதித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ திலங்க சுமதிபால எந்த குழுவினதும் எந்த கூட்டத்திலும் கலந்துகொள்வதை தடுக்குமாறும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

திலங்க சுமதிபால வாக்களிப்பதையும் கடந்த கால தலைவர் என்ற அடிப்படையில் செயற்படுவதையும் இலங்கை கிரிக்கெட்டை பிரதிநிதித்துவம் செய்வதையும் தடைசெய்யுமாறு அமைச்சர் அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தான் நியமித்த குழுவின்  அறிக்கை வெளியாகும் வரை முன்னர் திலங்க சுமதிபாலவிற்கு தடைவிதித்திருந்தார்.தற்போது குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளதை தொடர்ந்து உத்தியோகபூர்வமாக தடையை விதித்துள்ளார்.

இதேவேளை இந்த தடை குறித்து தான் இன்னமும் அறியவில்லை என தெரிவித்துள்ள திலங்கசுமதிபால எனக்கு அறிவிப்பதற்கு முன்னர் அமைச்சர் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார் சிறுவர்கள் அரசாங்கத்தினை நடத்தினால் இதுதான் நடக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35