முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை நாயகனுமான அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் மாணவ-மாணவிகள் மரியாதை செலுத்தினர்.

அப்துல்கலாம் நினைவிடத்தில் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர், குடும்பத்தினர் பிரார்த்தனை செய்தனர்.

முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை நாயகனுமான அப்துல் கலாமின் 88ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

 இதையொட்டி ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர் கலாம் நினைவிடத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து அரச அதிகாரிகள் அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

ராமேசுவரத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா வந்திருந்த பொதுமக்கள் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் அவர் படித்த ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பாடசாலையிலும்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.