கடும் காற்றின் காரணமாக குருநாகல் பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் உள்ள 154 க்கும் அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அனர்த்த நிவாரண சேவை நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குருநாகல் மாவட்டத்தின் பல பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்க்பபட்டுள்ளதோடு , அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாரியபொல, நிக்கவரெட்டிய, கொபேய்கனே, கல்கமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தார்

அத்தோடு மின் இணைப்புகளில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பிகள் எனபன முற்றாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.