தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இரு கிரிக்கெட் வீரர்கள்

Published By: Digital Desk 3

15 Oct, 2019 | 10:26 AM
image

இரண்டு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளார்கள்.

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இயக்குனர் அஜய் ஞானமுத்து  இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்நிலையில் ஹர்பஜன் சிங் சந்தனாம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிக்கிறார்.

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறும்போது, 'நான் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், சினிமா, எனக்கு நிச்சயமாக புதிய உலகம். இயக்குநர் அஜய் ஞானமுத்து, வடதோராவில் உள்ள எனது வீட்டுக்கு வந்து கதை சொன்னார். அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, ‘எதற்கு நான் நடிக்கணும்?’ என்பதுதான். அவர் அந்த கேரக்டரையும், நான் நடித்தால் எப்படி இருக்கும் என்று சொன்னதை கேட்டதும் சம்மதித்துவிட்டேன். இந்தப் படத்தில் விக்ரமுடன் நடிப்பது பெருமையான விஷயம். அவர் சிறந்த நடிகர். ஏராளமான பார்வையாளர்கள் முன்பு நான் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அதனால் எனக்குப் பதற்றம் ஏதும் இல்லை. அந்த உணர்வோடு எந்தப் பதற்றத்தையும் ஒப்பிட முடியாது. குறைந்தபட்சம் சில ரீடேக்குகள் வாங்குவேன்’ என கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் நடிப்பதாக ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது. சந்தனாம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் ‘டிக்கிலோனா’ படக்குழுவுக்கு அவர் நன்றியை தெரிவித்துள்ளார். 

அத்துடன், “தலைவர், தல, தளபதி உருவாகிய பூமி. தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே. உங்களால் வெள்ளித்திரையில். இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன்” என்று பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41