(இராஜதுரை ஹஷான்)

பொதுக் கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்தார்.

அத்துடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் பாராளுமன்ற அங்கிகாரத்துவம் பெற்றுள்ள அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் உள்ளடங்ககாக இதுவரையில் 23 கட்சிகள்  கூட்டணியமைத்துக் கொண்டுள்ளார்கள்.  

தற்போதும் 12 அரசியல் கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது. எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 35 கட்சிகளுடன் பலமான கூட்டணியை அமைத்துக்  கொள்வோம் என்றும் அவர் கூறினார்.