மஸ்கெலியாவிலிருந்து காட்மோர், டீசைட், மிட்லோதியன் போன்ற இடங்களுக்கு செல்லும் காட்மோர் பஸ்கள் 1 மணித்தியாலத்திற்கு ஒரு பஸ் மாத்திரமே செல்கிறது. 

இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், பாடசாலை செல்லும் மாணவ,மாணவிகளும் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். 

முன்னர் பாதை சீரற்று காணப்பட்டாலும் தற்போது இப்பாதை சீர்செய்யப்பட்டு இருப்பினும் மக்கள் போக்குவரத்து செய்வதற்கு அவதியுருகின்றனர்.

இவ்வீதியூடாக நாளாந்தம் 30 நிமிடத்திற்கு ஒரு பஸ் சேவையில் ஈடுபடுத்த வேண்டும். மேலும் தற்போது தீபாவளி பண்டிகை வருவதால் மக்கள் அதிகளவு நகருக்கு வந்து செல்கின்றனர் ஆகையால் ஒரு பஸ்ஸில் 30 பேர் வீதம் பயணித்தால் பயணிகளுக்கும் பஸ் உரிமையாளர்களுக்கும் எந்த ஒரு அசௌகரியமும் ஏற்படாது.

அதிகளவு பயணிகளை ஏற்றி செல்வதால் பல பிரச்சினைகளுக்கு பயணிகள் முகம் கொடுக்க வேண்டியுள்ளனர். குறிப்பாக இப்பிரச்சினையை தீர்க்க ஹட்டன் அரச பஸ் முறையாக சேவையில் ஈடுபடின் மேலதிக பிரச்சினைகள் இருக்காது என்பது மக்களின் கணிப்பாகும். 

இந்நிலையில் சம்பந்தப்பட்டோர் இதுவிடயமாக முறையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென பயணிகள் கேட்டுக்கொள்கின்றனர்.