உணவு உண்டுக் கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கியதில் இளைஞரொருவர் அந்த இடத்திலே உயிரிழந்த சம்பவமொன்று மொரவக்க பொலிஸ் பிரிவைக் சேர்ந்த கால்ல வத்த என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது.

 24 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அவரின் மனைவி அதிர்ச்சி அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தோட்ட வேளையை முடித்து விட்டு தனது மனைவியுடன் உணவு உட்கொண்டிருந்த வேளையிலேயே இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் போது வீட்டிலிருந்த அனைத்து மின் உபகரணங்களும் பழுதடைந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பாக மொரவக்க பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.