கன்னடப் படத் தயாரிப்பாளர் ஒருவரும், ஒளிப்பதிவாளரும் தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக தமிழ் நடிகை புவிஷா என்பவர் புகார் கூறியுள்ளார்.
மலேஷியாவை சேர்ந்த தமிழ் பெண் புவிஷா மனோகரன். பாலா இயக்கிய 'பரதேசி 'படத்தில் அறிமுகமானார். ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த இந்திப் படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் தீபிகா படுகோனேயின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார்.
புவிஷா இப்போது கன்னடத்தில் 'ஜில் ஜில்' என்ற கன்னடப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மது இயக்கிய இந்தப் படத்தை வெங்கடேஷ் பிரசாத் தயாரித்தார். உதய் பல்லால் ஒளிப்பதிவு செய்தார். இந்த படத்தின் படப்பிடிப்பில் தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புவிஷா புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " 'ஜில் ஜில்' படத்தில் என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ததிலிருந்தே தயாரிப்பாளர் வெங்கடேஷ் பிரசாத்தும், ஒளிப்பதிவாளர் உதய் பல்லாலும் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். படப்பிடிப்பில் அடிக்கடி பாலியர் ரீதியில் தொல்லை கொடுத்தார்கள். தயாரிப்பாளர் என்னை ஹோட்டல் அறைக்கு வரும்படி அழைத்தார்," என்று தெரிவித்துள்ளார். இருவர் மீதும் பொலிஸில் புகார் தெரிவிக்கப் போவதாக புவிஷா அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM