இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்ததுடன் 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

முகமதாபாத்க்கு அருகிலுள்ள வாலித்பூர் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி குடியிருப்புக் கட்டிடத் தொகுதியிலேயே  குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடத் தொகுதி இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து சம்பவிடத்திற்கு விரைந்த பொலிஸாரும், தீயணைப்பு வீரர்களும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். 

இந்த வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்ததுடன் 15கும் மேற்பட்டோர்  காயமடைந்துள்ளனர். பலத்தயாகங்களுடன் மீட்கப்பட்ட 06 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையடுத்து  சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்த்க்கது.