(இரா.செல்வராஜா)

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 20 ஆம் திகதி வெளியிடப்பட இருப்பதாக ஜனாதிபதி தேர்தல் செயலக இணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை பல்துறை சார்ந்த 32 நிபுனர்களால்  தயாரிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது பங்காளி கட்சிகளுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அவர்களால் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் மற்றும் சிபாரிசுகள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினை வாழ்க்கை செலவை கட்டுப்படுத்துதல் விவசாயிகளின் பிரச்சினை , வெளிநாட்டு முதலீடு ஆகிய விடயங்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுமென கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தனர்.