(செ.தேன்மொழி)

வீரகுல பகுதியில் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரகுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புவவத்தை மற்றும் கல்தொட்ட முல்ல ஆகிய பகுதியில் நேற்று பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

யக்கல - கல்தொட்டமுல்ல பகுதியைச் சேர்ந்த 47மற்றும் 50 வயதுடைய நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது தம்புவவத்தை பகுதியில் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு இலட்சத்து ஆயிரத்து 250 மில்லி லீட்டர் மதுபானமும், கல்தொட்ட முல்ல பகுதியில் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 33 ஆயிரத்து 750 மில்லி லீட்டர் மதுபானமும் மீட்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.