ரணிலா ? மஹிந்தவா ? மக்கள் தீர்மானிக்க வேண்டும் : தினேஷ்

Published By: R. Kalaichelvan

14 Oct, 2019 | 02:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய  பாதுகாப்பினை அலட்சியப்படுத்தி 250ற்கும் அதிகமான உயிர்களை கொன்ற  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வேண்டுமா,  அல்லது 30வருட கால சிவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து தேசிய  பாதுகாப்பினை பலப்படுத்திய  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வேண்டுமா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கடவத்த நகரில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தற்போது முழுமையாக மறந்து விட்டது. தொடர் குண்டுத்தாக்குதல் கத்தோலிக்க தேவாலயங்களில் நடத்தப்படும் என்று  இந்திய புலனாய்வு பிரிவு தொடர்ந்து அரசாங்கத்திற்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

அரசாங்கத்தின் அலட்சியப் போக்கினால் 250ற்கும் மேலான உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புக்கள் அரசாங்கத்திற்கு ஒரு சாதாரண விடயமாகவே காணப்படுகின்றது.  குண்டுத்தாக்குதலை தொடர்ந்து  எழுந்த பல  கேள்விக்ளுக்கு இதுவரையில் விடை கிடைக்கப் பெறவில்லை.

தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றுவதற்காகவே அரசாங்கம் மக்களால் தோற்றுவிக்கப்படுகின்றது.

 இவ்விரண்டு விடயங்களிலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. ஆகவே மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முனைவது மக்களுக்கு  இழைக்கும் துரோகமாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06