45 வயது நபர் ஒருவர் தனது நிதி நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது மகனை மின் விசிறியில் தூக்கிட்டு கொலை செய்ய அதனை அவரது மகள் கையடக்க தொலைப்பேசியில் வீடியோ பதிவு செய்த சம்பவம் இந்தியாவின் பெங்களூருவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்த  45 வயது சுரேஷ் என்பவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதற்காக முதலில் அவருடைய மனைவி கீதா, மகன் வருணை கொலை செய்துள்ளார். முதலில் தனது 38 வயது மனைவி கீதாவைகொன்றவர். பின்னர் தனது 12 வயது மகன் வருணை அவரது கழுத்தில் போர்வையைச் சுற்றி மின் விசிறியில் தொங்கவிட்டுள்ளார். இதனால் கழுத்து இறுக்கி அந்த சிறுவன் மரணமடைந்துள்ளான்.

அந்தச் சிறுவனும் எவ்வித ஓசையும் எழுப்பாமல் இறப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவத்தைப் பார்த்த அவரது 17 வயது மகள் கதறியபடியே இதை தொலைபேசியில்  வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அருகில் அழுகுரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனே ஓடி வந்து பார்த்தபோது நடந்த கொடூரம் குறித்து 17 வயது இளம் பெண் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற. பொலிஸாரிடம் அந்த நபர் அளித்த வாக்குமூலத்தில், "எனக்கு 45 வயதாகிறது. நான் ஒரு நுன்நிதி நிறுவனம் நடத்தி வந்தேன். அதில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அதனால், குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தோம்.

என் மனைவி, மகனைக் கொலை செய்தேன். ஆனால், என் மகள் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துவிட்டார்" என்றார். இதையடுத்து பொலிஸார்  அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை ஏற்று அந்த நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.