(செ.தேன்மொழி)

சுகாதார அமைச்சில் தொழில் வாய்ப்பு பெற்றுத்தருவதாக குறிப்பிட்டு சிலரை ஏமாற்றி 3 இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் தொகை நிதி மோசடியில் ஈடுப்பட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்துகம பொலிஸ் நிலையத்திற்கு கடந்த தினங்களில் கிடைக்கப்பெற்ற 6 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை அகலவத்தை பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது அகலவத்தை - பதுரலிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.