வன்­மு­றைகள் வேண்டாம்!

Published By: R. Kalaichelvan

14 Oct, 2019 | 11:52 AM
image

நாட்டில் 8 ஆவது ஜனா­தி­பதித் தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில் பிர­தான அர­சியல் கட்­சி­களின் பிர­சாரக் கூட்­டங்கள் தீவி­ர­ம­டைய ஆரம்­பித்­துள்­ளன.

பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் நாட­ளா­விய ரீதியில் சூறா­வளிப் பிர­சா­ரத்தை ஆரம்­பித்­துள்­ளனர். நாட்டின் பல பகு­தி­க­ளிலும் அர­சியல் கட்­சி­களின் ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சாரக் கூட்­டங்கள் ஏற்­பாடு செய்­யப்­பட்டு வரு­கின்­றன.  

பிர­தான வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றங்­கி­யி­ருக்கும் சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் கோத்­தா­பய ராஜபக்ஷ, ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் சஜித் பிரே­ம­தாச, மக்கள் விடு­தலை முன்­னணி தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்­தியின் அநு­ர­கு­மார திசா­நா­யக்க ஆகியோர் நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் பங்­கு­ கொண்டு உரை­யாற்றி வரு­கின்­றனர்.  

ஐக்­கிய தேசியக் கட்­சியின் முத­லா­வது பிர­சாரக் கூட்டம் கொழும்­பிலும் சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­வி­னதும் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யி­னதும் தேர்தல் பிர­சாரக் கூட்­டங்கள் அநு­ரா­த­பு­ரத்­திலும் கடந்­த­வாரம் நடை­பெற்­றன.  இந்தக் கூட்­டங்­களில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­யி­ருந்த பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் தாம் தேர்­தலில் வெற்­றி­பெற்றால் எவ்­வ­கை­யான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்போம் என வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்­தனர்.

இவ்­வாறு நாட்டின் 8ஆவது ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்கிக் கொண்­டி­ருக்­கின்ற சூழ­லிலும் அர­சியல் கட்­சி­க­ளி­னதும் பிர­தான வேட்­பா­ளர்­க­ளி­னதும் பிர­சாரக் கூட்­டங்கள் தீவி­ர­ம­டையத் தொடங்­கி­யுள்ள பின்­ன­ணி­யிலும் நாட்டின் அனைத்து தரப்­பி­னரும் கவனம் செலுத்த வேண்­டிய விடயம் ஒன்று காணப்­ப­டு­கின்­றது.  

அதா­வது தேர்தல் காலத்தில் எக்­கா­ரணம் கொண்டும் யாரும் வன்­மு­றை­களைத் தூண்டும் வகையில் செயற்­ப­டக்­கூ­டாது என்­ப­துடன் எந்­த­வ­கை­யிலும் வன்­முறை கலா­சா­ரத்தை கொண்­டு­வந்­து­வி­டக்­கூடாது என்­பதில் அனைத்து தரப்­பி­னரும் உறு­தி­யாக இருக்கவேண்டும். தேர்தல் என்­பது ஜன­நா­யக கட்­ட­மைப்பின் மிக முக்­கி­ய­மான பண்­பாகும். இந்தத் தேர்­த­லூ­டா­கவே மக்கள் தமது ஜன­நா­யக உரி­மையை பயன்­படுத்­து­வ­துடன் தமக்கு தேவை­யான தமக்கு விருப்­ப­மான தலை­வரை தெரிவு செய்­கின்­றனர். எனவே அந்தத் தேர்­தலில் வாக்­கா­ளர்கள் சுய­மாக முடி­வெ­டுக்­கவும் சுதந்­தி­ர­மான நீதி­யான முறையில் வாக்­க­ளிக்­கவும் சந்­தர்ப்பம் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட வேண்டும். எந்தவொரு கார­ணத்தைக் கொண்டும் வன்­மு­றைகள் மக்­களின் தீர்­மா­னங்­க­ளிலோ அல்­லது தெரி­விலோ அழுத்தம் பிர­யோ­கித்­து­விடக் கூடாது. இந்த விட­யத்தில் அனைத்து தரப்­பி­னரும் மிகவும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் பொறுப்­பு­ணர்­வு­டனும் செயற்­பட வேண்டும்.

தேர்தல் காலம் என்­றாலே வன்­மு­றைகள் இடம்­பெ­று­வது வழ­மை­யா­கி­விட்­டது. அண்­மைய காலங்­களில் இடம்­பெற்ற தேர்­தல்­களில் வன்­முறை சம்­ப­வங்­களின் பதி­வுகள் ஒப்­பீட்டு ரீதியில் குறை­வாக காணப்­ப­டினும் கூட இன்னும் வன்­மு­றைகள் இடம்­பெற்­றுக்­கொண்­டுதான் இருக்­கின்­றன. நாட்டின் எட்­டா­வது ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்டு வேட்­பு­மனுத் தாக்­கல்கள் நிறை­வ­டைந்­துள்­ள­துடன் அர­சியல் கட்­சிகள் மிகத் தீவி­ர­மான பிர­சா­ரங்­களை ஆரம்­பித்­துள்ள சூழலில் ஆங்­காங்கே சில வன்­முறை சம்­ப­வங்கள் பதி­வாகி இருப்­ப­தா­கவே தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தேர்தல் வன்­மு­றைகள் தொடர்பில் தகவல் கொடுப்­ப­தற்கு தேர்தல் ஆணைக்­கு­ழுவில் நிறு­வப்­பட்­டுள்ள பிரி­வுக்கு பல முறைப்­பாடுகள் வன்­மு­றைகள் தொடர்பில் செய்­யப்­பட்­டுள்­ளன. தேர்தல் காலம் ஆரம்­பித்து சிறிய காலப்­ப­கு­திக்­குள்­ளேயே பல்­வேறு முறைப்­பாடுகள் தொடர்­பான தக­வல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இது ஆரோக்­கி­ய­மான விட­ய­மல்ல. எந்­த­வ­கை­யிலும் எந்­த­வொரு தரப்பும் வன்­மு­றை­களை தூண்­டி­வி­டவோ கையி­லெ­டுக்­கவோ கூடாது. வன்­மு­றை­க­ளூ­டாக தேர்தல் வாக்­க­ளிப்பில் அழுத்தம் பிர­யோ­கிக்க முற்­ப­டு­வது ஜன­நா­ய­கத்­துக்கு விழு­கின்ற பாரிய அடி­யா­கவே கரு­தப்­படு­கி­றது. வன்­மு­றைகள் ஊடாக ஜன­நா­யக ரீதியில் எத­னையும் சாதிக்க முடி­யாது என்­பதை அர­சியல் கட்­சி­களும் வேட்­பா­ளர்­களும் ஆத­ர­வா­ளர்­களும் உணர்ந்­து­கொள்ள வேண்டும்.  

வன்­மு­றை­களை பிர­யோ­கிப்­பதன் மூல­மாக பெறப்­படும் வெற்­றி­யா­னது ஜன­நா­யக வெற்­றி­யாக அமை­யாது. அது­மட்­டு­மன்றி வன்­மு­றை­களை பிர­யோ­கிப்­பதனூடாக பெறப்­படும் வெற்­றி­யா­னது நிலைத்த தன்­மையை கொண்­டி­ருக்­காது என்­ப­தையும் சகல தரப்­பி­னரும் புரிந்­து­கொள்ள வேண்டும். வாக்­கா­ளர்கள் வேட்­பா­ளர்­களின் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை பார்த்து அவற்றை மதிப்­பீடு செய்து அவற்­றி­லுள்ள சாதக பாதக தன்­மை­களை ஆராய்ந்து யாருக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என்­பதை தீர்­மா­னிப்­பார்கள். அவ்­வாறு அந்த மக்கள் தீர்­மானம் எடுப்­ப­தற்கு சந்­தர்ப்பம் சரி­யான முறையில் வழங்­கப்­பட வேண்டும். அதற்­கான சூழல் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

மாறாக வாக்­கா­ளர்­களின் தீர்­மா­னத்தில் வன்­முறை நிலை­மைகள் தாக்கம் செய்­யப்­படக் கூடாது. பிர­சாரக் கூட்­டங்­க­ளின்­போது அல்­லது தேர்தல் காலத்தின் போது எந்­த­வொரு தரப்பும் எந்­த­வ­கை­யிலும் வன்­மு­றை­களில் ஈடு­பட்­டு­விடக் கூடாது. அவ்­வாறு வன்­முறை நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தானது பொது­மக்­க­ளுக்கும் அர­சாங்கம் மற்றும் தனியார் சொத்­துக்­க­ளுக்கும் பாரிய சேதங்­களை ஏற்­ப­டுத்தி விடும். இதனால் அப்­பாவி பொது­மக்கள் கூட பாரிய பாதிப்­பு­களை சந்­திக்­க­வேண்டி ஏற்­படும். எனவே இவற்றை முழு­மை­யாக தவிர்த்­து­வி­டு­வதே ஜன­நா­ய­கத்­துக்கு ஒரு சிறந்த விட­ய­மாக அமையும். அதனால் ஆத­ர­வா­ளர்கள் எக்­கா­ரணம் கொண்டும் வன்­முறை­களில் ஈடு­ப­டக்­கூ­டாது என்­பதை அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள், செய­லா­ளர்கள் மற்றும் வேட்­பா­ளர்கள் சரி­யான முறையில் அறி­வு­றுத்த வேண்டும். அவ்­வாறு அறி­வு­றுத்­து­வ­த­னூ­டா­கவே வன்­மு­றை­களை தவிர்க்க முடியும். எனவே இந்த விட­யத்தில் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கும் செய­லா­ளர்­க­ளுக்கும் பிர­தி­நி­தி­க­ளுக்கும் மிக முக்­கி­ய­மாக வேட்­பா­ளர்­க­ளுக்கும் பாரி­ய­தொரு பொறுப்பு இருக்­கின்­றது என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது.

அது­ம­ட்­டு­மன்றி தேர்தல் ஆணைக்­கு­ழுவும் இந்த விட­யத்தில் மிகவும் செயற்­றி­ற­னான முறையில் செயற்­பட்டு எங்கும் வன்­முறைகள் இடம்­பெற்­று­வி­டாது சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். இதற்கு பொலிஸார் உள்­ளிட்ட பாது­காப்பு தரப்­பினர் பாரிய ஒத்­து­ழைப்பை வழங்­க­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­தது. பொலிஸார் மற்றும் பாது­காப்பு தரப்­பி­னரின் முழு­மை­யான ஒத்­து­ழைப்­பி­னூ­டா­கவே வன்­மு­றை­களை தவிர்ப்­ப­தற்கு தேர்தல் ஆணைக்­குழு நட­வ­டிக்கை எடுக்க முடியும். ஆதலால் இந்த தரப்­பி­னரின் ஒத்­து­ழைப்பு மற்றும் ஈடு­பாடு மிகவும் அவ­சி­ய­மா­ன­தா­கவும் முக்­கி­ய­மா­ன­தா­கவும் காணப்­ப­டு­கி­றது.  

அதே­போன்று  சுயா­தீன மற்றும் நீதி­யான தேர்­தல்­களை வலி­யு­றுத்­து­கின்ற சிவில் அமைப்­பு­களும் வன்­மு­றை­களைத் தவிர்ப்­பதில் பாரி­ய­தொரு வகி­பா­கத்தை வகிப்­பது அவ­சி­ய­மா­கி­றது. மக்­க­ளுக்கு நீதி­யா­ன­தொரு தேர்­தலை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு இந்த சிவில் நிறு­வ­னங்கள் தமது பங்­க­ளிப்பை சரி­யான முறையில் வழங்க வேண்டும். யாரும் வன்­மு­றை­களில் ஈடு­ப­டக்­கூ­டாது என்­பது தொடர்­பான பிர­சா­ரத்தை மிகவும் செயற்­றி­ற­னான முறையில் மக்கள் மத்­தியில் மேற்கொள்­வ­தற்கு சுயா­தீனத் தேர்­தலை உறு­திப்­ப­டுத்­து­வ­த­ற்­கான அமைப்­புகள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.  

அதனால் சுயா­தீன மற்றும் நீதி­யான தேர்­தலை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான பொது அமைப்­பு­க­ளுக்கும் இந்த வன்­மு­றை­களை தவிர்ப்­பதில் காணப்­ப­டு­கின்ற பொறுப்பு தொடர்பில் உணர்ந்து அதற்­கேற்ற நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். எமது நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக வன்­மு­றை­களை தடுப்­பதில் சுயா­தீன தேர்­தலை உறு­திப்­ப­டுத்தும் சிவில் அமைப்­பு­களின் பங்­க­ளிப்­புகள் குறிப்­பி­டத்­தக்க வகையில் அமைந்­துள்­ளன என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். அதே­போன்று இந்த வன்­மு­றை­களை தடுக்கும் செயற்­பாட்டில் நாட்டின் சர்­வ­மதத் தலை­வர்­களும் மிக முக்­கி­ய­மான வகி­பா­கத்தை வகிக்க வேண்­டி­ய­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றார்கள். மதத் தலை­வர்கள் பொது­வாக மக்­க­ளுக்கு வழங்குகின்ற ஆலோசனைகள், அறிவுரைகள் முக்கியமானவை என்பதுடன் அவை பெரிதும் மதிக்கப்படுகின்றன. எனவே தேர்தல் காலத்தில் வன்முறைகள் இடம்பெறாத வகையில் ஒரு சூழலை உருவாக்குவதற்கு சர்வமதத் தலைவர்களும் தமது உயரிய பங்களிப்பை வழங்கவேண்டியது மிகவும் முக்கியத்துமிக்கதாக காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி வாக்காளர்களும் பொதுமக்களும் தாம் எந்தவகையிலும் வன்முறைகளுக்கு உட்படாதவர்களாக இருந்து தமது வாக்குப்பதிவு தொடர்பான தீர்மானத்தை சுயாதீனமாக எடுக்க வேண்டும்.

எது எப்படி நடந்தாலும் இறுதியில் வாக்காளர்களே அனைத்தையும் தீர்மானிக்கின்றனர். எனவே எந்தவொரு வகையிலும் வன்முறைகள் ஊடாக அழுத்தத்துக்கு உட்படாமலும் வன்முறைகளை தடுத்து தவிர்ப்பதற்கும் வாக்காளர்களும் தமது தரப்பில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். அந்த வகையில் அனைத்து தரப்பினரும் இந்த விடயத்தில் பொறுப்புடனும் வன்முறைகளை தடுக்கும் உயரிய நோக்கத்துடனும் செயற்படுவதே வன்முறைகளற்ற சுயாதீனமான நீதியான தேர்தலுக்கு வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13