ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும் சிவா­ஜி­லிங்கம் இருபத்தையாயிரம் வாக்­கு­களைப் பெற முடி­யுமா என்று எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

எதிர்க்­கட்சி தலைவரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் நேற்று பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய போதே அவர் இவ்­வாறு கேள்வி எழுப்­பினார். இங்கு மேலும் கருத்து தெரி­வித்த அவர்,

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­தி­ரனை அண்­மையில் சந்­தித்து பேசி­யி­ருந்தேன். உத்­தி­யோகப்பற்­றற்ற முறையில் இந்த சந்­திப்பு இடம்­பெற்­றது. 

அர­சியல் மற்றும் பொரு­ளா­தார விட­யங்கள் தொடர்பில் கலந்துரையாடப்­பட்­டது. உத்­தி­யோ­க­பூர்­வ­மாக விரைவில் கூட்­ட­மைப்பு தலை­வரை சந்­தித்து பேச­வுள்ளேன்.

வடக்கு, கிழக்கு பகு­தி­க­ளுக்கு நான் விஜயம் செய்து பிரசாரங்­களில் ஈடு­படவுள் ளேன். பலா­லியில் சர்­வ­தேச விமான நிலை யம் அமைக்­கப்­ப­டு­வது நல்­லது. அப்­ப­குதி மக்கள் பய­ணி­க­ளுக்கு அது நன்மை பயக்கும்.இந்த விமா­ன­நி­லைய திறப்பு விழாவில் கலந்­து­கொள்­ளு­மாறு எனக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

 ஆனால் நேரமின்மையின் காரணமாக நான் அந்த நிகழ்வுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைக்கவுள்ளேன் என் றார்.