உதவிக்கரம் நீட்டுவதற்கு எவருமில்லையென கவலை கொள்ள வேண்டாம் - டக்ளஸ்

Published By: Digital Desk 4

14 Oct, 2019 | 10:31 AM
image

உங்­க­ளுக்கு உற­வுகள் இல்லை என்றோ உத­விக்­கரம் நீட்ட  யாரும் இல்லை என்று கவ­லை­கொள்ள வேண்டாம். உங்­க­ளுக்­காக  கரம் கொடுக்க நான் இருக்­கின்றேன். நம்­பிக்­கை­யுடன் வாழ்க்­கையை முன்­னெ­டுத்துச் செல்­லுங்கள் என ஈழ மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லாளர் நாயகம் டக்ளஸ் தேவா­னந்தா செஞ்­சோலை கிராம உற­வு­க­ளுக்கு நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார்.

கிளி­நொச்சி மலை­யாள்­புரம் பகு­தியில் அமைந்­துள்ள செஞ்­சோலைக் கிராமத்­திற்கு விஜயம் மேற்­கொண்ட செய­லாளர் நாயகம் அங்கு வாழும் உற­வு­க­ளது பிரச்­சி­னைகள் தொடர்பில் நேரில் பார்­வை­யிட்டு ஆரய்ந்­த­றிந்­து கொண்டார்.

அதன்­ பின்னர் அக்­கி­ரா­மத்தில் நடை­பெற்ற செஞ்­சோ­லையின் வலிகள் இறு­வட்டு வெளி­யீட்டு நிகழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு இறு­வட்டை வெளி­யிட்டு வைத்த பின்னர் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

 இதன்­போது அவர் மேலும் தெரி­விக்­கையில், -

கடந்த கால யுத்­தத்தின் வலிகள் உங்கள் ஒவ்­வொ­ரு­வ­ரதும் வாழ்க்­கையில் கண்­ணூ­டாக தெரி­கின்­றது. உங்­க­ளது வாழ்­கையில் என்றோ நிரந்­தர ஒளி­ம­யத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும். ஆனால் அதற்கு நீங்கள் நம்­பிய தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் அக்­கறை கொள்­ளவில்லை.அவர்கள் உங்­க­ளது அழு­கை­க­ளைத்தான் தமது சுய­நல அர­சி­ய­லுக்கு முத­லீ­டாக கொள்­கின்­றனர். இத­னால்தான் யுத்தம் முடிந்து இது­வரை காலத்­திலும் அவர்கள் உங்­களை கண்­டு­கொள்­ளா­தி­ருக்­கின்­றனர். 

ஆனால் இன்று நான் உங்­க­ளிடம் வந்­துள்ளேன். உங்கள் வலி­களை அறிந்­தவன் நான். உங்­க­ளது வாழ்க்­கையில் நிரந்­தர வசந்தம் வீச  நிச்­சயம் அனைத்து முயற்சி­க­ளையும் செய்வேன். நீங்கள் என்­மீது நம்­பிக்கை வையுங்கள். நான் நீங்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சினை­ க­ளான குடிநீர் பிரச்­சினை, மல­ச­ல­கூட பிரச்சினை போன்ற அத்­தி­யா­வ­சிய பிரச்­சி­னை­க­ளுக் கான தீர்­வு­களை விரைவில் நிறைவு­வு­செய்து தரு­கின்றேன். 

அது­போல உங்கள் ஒவ்­வொ­ரு­வ­ரது வாழ்­விலும் நிரந்­த­ர­மான எதிர்­கா­லத்தை கட்­டி­யெ­ழுப்ப அனைத்­து­வி­தமான முயற்­சி­க­ளையும் நான் முன்­னெ­டுப்பேன். வர­வுள்ள ஆட்சி மாற்றத்தில் இவ்வாறாக எமது மக்கள் படும் துன்ப துயரங்களை துடைத்தெறிந்து அனைத்து தமிழ் மக்களையும் சிறப்பான ஒரு வாழ்வியல் சூழ்நிலைக்கு அழைத்து செல்லவேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15