துருக்கி படையினர் நடத்திய வான்தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள குர்து இன போராளிகள் மீது துருக்கி தொடர்ந்தும் வான்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் குர்து இன போராளிகள் பிடியில் இருந்த நகரத்தில் அப்பாவி மக்கள் 9 பேரை துருக்கி ஆதரவு போராளிகள் நேற்று முன்தினம் சுட்டுக்கொன்றுள்ளனர்.