எளிய வழியில் உடல் எடையைக் குறைப்பது எப்படி ?

Published By: Robert

03 Dec, 2015 | 12:23 PM
image

இன்றைய காலத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் எடை அல்லது ஊளைச் சதை உடம்பு ஆகும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, கொழுப்பு நிறைந்த உணவு, போதிய உடல் உழைப்பு இன்மை, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றன இதற்கு முக்கியக் காரணமாக அமைகின்றது.

இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் எடையைக் குறைப்பது எப்படி ?

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.

இது எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்கு‌ம் மேலாக காலை‌யி‌ல் அரை ம‌ணி நேர‌ம் நடைப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டா‌ல் கொழு‌ப்பு‌ம் கரையு‌ம், உட‌‌ல் எடையு‌ம் குறையு‌ம், பு‌த்துண‌ர்வாகவு‌ம் இரு‌க்கு‌ம். உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். கொள்ளு ரசம், கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம். 

இரவு ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் அதனை சாப்பிட்டு வந்தால் உடல் எடை நிச்சயம் குறைக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right