அரசியலமைப்பு பேரவையின் தலைவர் சபாநாயகர் கருஜெயசூரியவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

குறிப்பாக, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நிரந்தரமான பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு பேரவை பரிந்துரைத்திருந்தது.

எனினும் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்தின்போது பிரசன்னமாகியிருந்த சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா, பதில் பணிப்பாளர் நாயகம் பதவியில் தொடர்ந்துகொண்டிருக்கின்ற சமகாலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தமுடியாது என்றும் நிரந்தரமான பணிப்பாளர் நாயகத்தினை நியமிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு கிடையாது என்றும் சுட்டிக்காட்டியிருந்தர்.

இவ்வாறான பின்னணியிலேயே அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது. இதன்போது, நிரந்தரமான பணிப்பாளர் நாயகத்தினை நியமித்தல் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கான அனுமதியளித்தல் உள்ளிட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகின்றது.