(ஆர்.ராம்)

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் சுதந்திரக்கட்சிக்கும் இடையிலான நேரடி ஒப்பந்தமொன்று எதிர்வரும் 19ஆம் திகதி கைச்சாத்திடுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சுதந்திரகட்சி ஆரவளிப்பதாக தீர்மானம் எடுத்து அறிவித்துள்ள நிலையில் சுதந்திரக்கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கட்சி ரீதியான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்தானது. இதில் இரு கட்சிகளினதும் செயலாளர்கள் கைச்சாத்திட்டிருந்தனர்.

இந்நிலையில் 17விடயங்களை உள்ளடக்கிய மற்றுமொரு ஒப்பந்தம் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவுக்கும், சுதந்திரக்கட்சிக்கும் இடையில் கைத்திடப்படவுள்ளது. இந்த ஒப்பந்தத்திலுள்ள விடயங்களை இறுதி செய்வதற்கான கலந்துரையாடல் நாளை திங்கட்கிழமை இருதரப்பின் கட்சிப்பிரதிநிதிகளுடன் இடம்பெறவுள்ளது.

இதன்போது, ஒப்பந்தத்தில் உள்ளர்க்கப்பட்டுள்ள விடயங்கள் இறுதி செய்யப்படவுள்ளதோடு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 19ஆம் திகதியும் உறுதிசெய்யப்படவுள்ளது.

இதனையடுத்து சுகததாஸ உள்ளக அரங்கில் மேற்படி ஒப்பந்தத்தினை மேற்கொள்வதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு இந்நிகழ்விற்கு சுதந்திரக்கட்சியின் நாடாளவிய ரீதியில் உள்ள அமைப்பாளர்கள், ஆதரவாளர்களும் அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.