(ஆர்.ராம்)

சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியைத் துறந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கட்சியின் தலைமையகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக அறிய முடிகின்றது.

குறிப்பாக, கட்சியின் தலைமையகத்தின் பாதுகாப்பிற்காக ஜனாதிபதி பாதுகாப்பு பரிவினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது கட்சியின் தலைமைப்பதிவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரி விலகியுள்ள நிலையில் அப்பாதுகாப்பு பிரிவினர் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்ற விடயம் அவருடைய கவனத்திற்கு தலைமையகத்தில் கடமையாற்றும் முக்கிஸ்தர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சமயத்தில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினைச் சேர்ந்தவர்களே தலைமையகத்தின் பாதுகாப்பு கடமையில் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என்றும், தன்னுடைய அனுமதியின்றி தலைமையக பாதுகாப்பு உள்ளிட்ட எந்தவொரு விடயத்திலும் முடிவுகளை எடுக்கவேண்டாம் என்றும் கடுமையான உத்தரவினை அலுவலகத்தில் கடமையாற்றும் முக்கிஸ்தர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் அறிய முடிகின்றது.