இந்த ஆண்டுகான  மருத்துவம், வேதியியல் துறைக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் 2018 , 2019 ஆம் ஆண்டுகளின் இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.

நோபல் பரிசின் 118 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக இரண்டு ஆண்டுகளுக்கான பரிசுகள் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

2018ஆம் ஆண்டின்  இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஓல்கா டோகார்ஸுக்கும் , 2019 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பீட்டர் ஹேண்ட்கேவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஓல்கா டோகார்ஸுக்  போலந்து நாட்டைச் சேர்ந்த 57 வயதான புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆவார். சிறந்த மொழி நடை பயன்பாட்டிற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.   

ஆஸ்திரியாவைச் சேர்ந்த  76 வயதான பீட்டர் ஹேண்ட்கே, சிறந்த நாடக மற்றும் நாவலாசிரியர் ஆவார். இவருக்கு மொழியியல் புலமைக்காக 2019ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதில் வெற்றி பெற்றிருக்கும் இருவருக்கும் தனித்தனியே ஒன்பது மில்லியன் ஸ்வீடன் குரோனர் வழங்கப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

பாலியல் புகார் காரணமாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு கடந்த ஆண்டு அறிவிக்கப்படவில்லை எனவே நோபல் தேர்வு குழுவின் மீது மக்களுக்கு உள்ள அவநம்பிக்கையை அகற்றும் நோக்கில் 2018ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு 2019ஆம் ஆண்டுடன் சேர்த்து வழங்கப்படும் என நோபல் அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டுள்ளது.