(எம்.மனோசித்ரா)

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் குடிவரவு - குடியகழ்வு சட்டத்தை மீறி வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் நேற்றைய தினம் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 39 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

பொலிஸாரால் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.