தேர்தலில் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?: முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் பேரவை அறிவுரை

Published By: J.G.Stephan

13 Oct, 2019 | 01:40 PM
image

ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்குப் பிந்­திய சூழ்­நி­லை­களில் முஸ்­லிம்கள் இரண்டாம் தரப்­ பி­ர­ஜை­க­ளா­கவே இருக்­கின்­றனர். அந்த நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து மீளும் வகையில் அம்­மக்­களின் வாக்­கு­ரி­மையை பயன்­ப­டுத்த வேண்டும் என இலங்கை முஸ்லிம் புலம்­பெ­யர்ந்தோர் பேரவை கோரிக்கை விடுத்­துள்­ளது. 

இவ்­வி­டயம் தொடர்பில் அப்­பே­ர­வையின் பிர­தம இணைப்­பாளர் முஹம்­மது சமீம் விடுத்­துள்ள ஊடக அறிக்­கையில்  மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையை பூர்­வீ­க­மாகக் கொண்ட இலங்கை முஸ்­லிம்கள் அண்­மைக்­கா­ல­மாக அர­சியல் ரீதி­யா­கவும், சமூ­க­ரீ­தி­யா­கவும் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றார்கள். இந்­நி­லையில்  இலங்கை முஸ்லிம்  மக்­களை நெருக்­க­டிக்குள் தள்­ளி­வி­டு­கின்ற அமைப்பில் திட்­ட­மிட்டு ஈஸ்டர் குண்­டுத்­தாக்­கு­தல்­களும் அரங்­கேற்­றப்­பட்­டன. 

இலங்­கையில் காணப்­ப­டு­கின்ற பல்­வேறு அர­சியல், பொரு­ளா­தார, சமூக நெருக்­க­டி­களை விடவும் இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தத்தைக் கார­ண­மாகக் காட்டி பாது­காப்பு சார்ந்த விடயம் முக்­கி­யத்­து­வ­ம­டைந்­தி­ருக்­கின்­றது.  ஜனா­தி­பதித் தேர்­த­லினை எதிர்­கொள்ளும் இலங்கை முஸ்லிம் மக்கள் அடிப்­ப­டை­களைப் புரிந்து கொண்டு தமது தேர்தல் தெரி­வு­களை மேற்­கொள்­ள­மு­டியும் என இலங்கை முஸ்லிம் மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளா­கிய நாம் எதிர்­பார்க்­கின்றோம். 

ஜன­நா­யக சமூ­க­மொன்றில் மிக­முக்­கி­ய­மான நிகழ்­வாக தேர்­தல்கள் நோக்­கப்­ப­டு­கின்­றன. அதுவே மக்­களின் விருப்­பினை வெளிப்­ப­டுத்தும் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட முக்­கிய நிகழ்­வா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றது. அந்­த­வ­கையில் இலங்கை முஸ்­லிம்கள் அனை­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிப்­பதை அதி­கூ­டி­ய­வ­கையில் உறு­திச்­செய்தல் அவ­சி­ய­மாகும். 

இலங்கை முஸ்­லிம்கள் எப்­போதும் நாட்டு நலன்­க­ளுக்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்­கின்­ற­வர்கள், அந்­த­வ­கையில் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் நாம் நாட்டு நலன்­க­ளுக்கே கூடுதல் முக்­கி­யத்­துவம் கொடுக்­கின்றோம். நாட்டில் இழை­யோ­டி­யி­ருக்­கின்ற  இன­வா­தத்தை தோற்­க­டித்து, நீண்­ட­கா­ல­மாக இழுத்­த­டிக்­கப்­ப­டு­கின்ற இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வினை வழங்­கு­வதன் மூலம் அனைத்து இன மக்­க­ளுக்கும் ஐக்­கி­ய­மா­கவும், சமா­தா­ன­மா­கவும் வாழக்­கூ­டிய சூழ்­நி­லையை உறுதி செய்­வ­தற்கும், நாட்டில்  நிலைத்து நிற்­கக்­கூ­டிய பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மற்றும் முன்­னேற்­றத்தை முன்­னெ­டுக்­கக்­கூ­டிய செயற்­றிட்­டங்­க­ளுக்கு நாம் நமது ஆதரவினை முன்வைக்கவேண்டும்.

எனவே மேற்படி முஸ்லிம் சமூகத்தின் நலன்களை அதிக அளவில் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவருக்கு முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை வழங்கமுடியும். மேற்படி ஆலோசனைகளை அடிப்படையாகக்கொண்டு எமது மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலினை எதிர்கொள்வார்க்ள் என எதிர்பார்க்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08