கட்டுமான மூலப்பொருட்கள் துறையில் உலகளாவிய முன்னோடியான LafargeHolcim குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான ஹொல்சிம் லங்கா நிறுவனம், இந்நாட்டின் முன்னணி சிறிய நிதிச்சேவை நிறுவனமான பிம்முத் பினான்ஸ் பிஎல்சி நிறுவனத்துடன் இணைந்து ‘பூர்ண நிவாசி’ எனும் மலிவு வீடமைப்பு செயற்திட்டத்திற்காக அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தது.
LafargeHolcim குழுமம் உலகளாவிய தளத்தின் ஓர் அங்கமான மலிவு வீடமைப்பு செயற்திட்டத்தின் ஊடாக மிகவும் குறைந்த செலவில் குறைந்த ஆதாயமீட்டும் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக கட்டின நிர்மாணிப்பாளர்களுக்கு ஆதரவளித்து சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செயற்திட்டத்தின் கீழ் பிம்முத் பினான்ஸ் பிஎல்சி நிறுவனத்துடன் இணைந்த சமூகத்தினர் தெரிவு செய்யப்பட்டு அனுகூலங்களை பெறவுள்ளதுடன், ஹொல்சிம் லங்கா மூலமாக விரிவான தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்படவுள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கைச்சாத்து குறித்து கருத்து தெரிவித்த ஹொல்சிம் (லங்கா) லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிலிப் ரிச்சர்ட்,
“2030 ஆம் ஆண்டளவில் உலகம் முழுவதும் 75 மக்களுக்கு ஆதரவளிக்கும் குறிக்கோளை கொண்ட LafargeHolcim இன் நிலையான அபிவிருத்தி மூலோபாயத்தின் ஓர் அங்கமே இந்த திட்டம் ஆகும்.
குறைந்த ஆதாயமீட்டும் குடும்பங்களுக்கு மனைகளை அமைக்க வீட்டு நிர்மாணிப்பாளர்களுக்கு ஆதரவளித்து 25 நாடுகளுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஹொல்சிம் லங்கா நிறுவனம், பிம்முத் பினான்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து அதன் திட்டத்தை மேலும் மேம்படுத்தவுள்ளது.
பலரது வாழ்க்கையையும் மேம்படுத்தவுள்ள ‘பூர்ண நிவாசி’ எனும் வீடமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பணம் குறித்து பெருமையடைகிறோம்” என்றார்.
பிம்முத் பினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளரும், பொது முகாமையாளருமான சமிந்த்ர கமகே கருத்து தெரிவிக்கையில்,
“ஆதரவு தேவைப்படுவோருக்கு நிதி தீர்வுகளை நாம் வழங்குவதையிட்டு பெருமையடைகிறோம். வசதிகளற்ற குறைந்த வருமானமீட்டும் பிரிவினருக்கு அவர்களின் விசேட தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய நிதி தீர்வுகளை வழங்க நாம் முயன்று வருகிறோம். உள்நாட்டு சமூகத்தினருக்கு ஆதரவளிக்கும் வகையில் ஹொல்சிம் போன்ற சர்வதேச நிறுவனம் கைகோர்த்துள்ளமை நிச்சயமாக எமக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
“பூர்ண நிவாசி”(பரிபூரண இல்லம்) செயற்திட்டத்தின் அறிமுகத்தோடு எமது வாடிக்கையாளர்களின் மனைக் கனவினை நனவாக்க எம்மால் முடிந்துள்ளது” என்றார்.
‘பூர்ண நிவாசி’ மலிவு வீடமைப்பு செயற்திட்டம் ஏற்கனவே 8 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் 2016 இன் இறுதியில் தேசியளவில் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த செயற்திட்டம் ‘லொவ தினன தருவட்ட ஹிசட்ட சவிசெவனக்’ (நாளைய உலகை வெற்றி கொள்ளவுள்ள உங்கள் குழந்தைக்கு சக்திமிக்க கூரை) எனும் தொனிப்பொருளின் கீழ் சமூகங்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM