ஜப்பானில் மையம் கொண்டுள்ள ஹகிபிஸ் புயல் காரணமாக இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் ஹகிபிஸ் புயல் காரணமான உண்டான வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களில் சிக்கி 16 பேர் காணாமல்போயுமுள்ளனர்.

மேலும் டோக்கியோவை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில வீடுகளுக்கு விரைவாக மீண்டும் மின்னிணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் காரணமாக கடந்த 61 வருடங்களில் இல்லாத அளவு கடுமையான மழையை ஜப்பான் சந்திக்க இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை அளித்து நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் 1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த புயலுக்குப் பிறகு ஏற்பட உள்ள சக்திவாய்ந்த புயல் இதுவாகும்.

இதேவேளை ஜப்பானில் சிபா கென் மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 80 கிலோ மீட்டர்.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் ஏதும் இல்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.