கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீட்டிலிருந்து கைக்குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ரி - 56 ரக துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்ட முன்னாள் விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்பினரின் வீட்டை சோதனைக்குட்படுத்தியபோதே மேற்படி வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த சம்பவத்தின் போது குறித்த சந்தேக நபரின் மனைவியும் சகோதரியும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைக்குண்டுகள், சி 4 வெடிமருந்துப் பொருட்கள், துப்பாக்கி ரவைகள், ரைபல் துப்பாக்கிடெடனெட்டர் குச்சிகள், கத்தி, ஜீ.பி.எஸ். கருவிகள், கமராக்கள், மடிக் கணிணிகள், கையடக்கத் தொலைபேசிகள், புலிகள் இயக்கத்தின் சீறுடைகள் உள்ளடங்கலான பொருட்களையே இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.