அமெரிக்கா, வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கியுடன் நின்ற சந்தேக நபரை ரகசிய பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து காட்டியதால், வயிற்றுப் பகுதியில் சுட்டதாக ஏ.பி.சி செய்தியிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகை தற்காலிகமாக சில மணிநேரங்கள் மூடப்பட்டது. 

துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மேரிலேண்ட் மாநிலத்தில் கோஃல்ப் விளையாடிக் கொண்டிருந்தார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இருந்துள்ளார். 

அவரை பாதுகாப்பான இடத்திற்கு ரகசிய பொலிஸார் அப்புறப்படுத்தியாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுடப்பட்ட நபர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.