வெலிமடை நகரில் மரமொன்று முறிந்து வீடொன்றின் மீது வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இச்சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட 18, 10 மற்றும் 14 வயதுடைய  3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமடை பிரதேச சபைக்கு அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வீடொன்றின் மீதே குறித்த மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.