நேபாளத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று  விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்ததோடு  98 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

நேபாளத்தில் சிந்துபால்சாக் மாவட்டத்தில்  நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன்   9 பேர்  சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். 

மேலும் இந்த விபத்தில் 98 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு துலிகெல் வைத்திய சாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 

அதிகப்படியான பயணிகளை ஏற்றிச்சென்றதன் காரணமாக பஸ்ஸின் சில்லு சேதமடைந்தமையாலே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.