வெளிநாட்டில் தயாரிக்கும் ஒரு தொகை சிகரெட்டுக்களை, டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இலங்கை பிரஜையொருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேகாலை பகுதியை சேர்ந்த 35 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபர் இன்று காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தபோது, அவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பயண பொதியை சோதனையிட்டபோதே ஒரு தொகை சிகரெட்டுக்கள் சிக்கியுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அத்தோடு, 148 பக்கற்றுக்களில் 29,600 சிகரெட்டுக்கள் இருந்துள்ளன. இந்நிலையில், இச்சிகரெட்டுக்களின் பெறுமதி சுமார் 16 இலட்சத்து 28 ஆயிரம் ரூபா பெறுமதியானது என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.