ஜப்பானுக்கான ஶ்ரீ லங்கன் விமான  சேவை இன்று தாமதமாக இடம்பெறுவதாக ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜப்பானில் ஏற்பட்டுள்ள ஹகிபிஸ் சூறாவளி காரணமாக ஜப்பானுக்கான இலங்கை விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று இரவு ஜப்பான் நோக்கி செல்லவுள்ள யூ.எல்.460 ரக விமானம் நாளை அதிகாலை 2.15 மணியளவில் தாமதமாக புறப்பட்டுச் செல்லவுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அத்தோடு விமான சேவை தொடர்பான மேலதிக விபரங்களை 0117771979 என்ற இலக்கத்துக்கு அழைத்து அல்லது ஶ்ரீலங்கன் விமான சேவையின் இணைத்தளத்திற்கு பிரவேசித்து பெற்றுக் கொள்ள முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிபடத்தக்கது.