இந்தியாவில் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு சென்ற இந்திய பிரதமர் மோடி, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

சீன அதிபர் சி ஜின்பிங்குடன் சந்தித்து பேசுவதற்காக மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்திய பிரதமர் மோடி தங்கியுள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்து மோடி, இன்று காலை நடைபயிற்சி நடைபயிற்சி சென்றார். கால்களில் செருப்பு அணியாமல் சென்ற அவர், கடற்கரை மணலில் கிடந்த குப்பைகளைக் கைகளால் அள்ளி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

சுமார் அரை மணி நேரம், துப்புரவு பணியில் ஈடுபட்ட இந்திய பிரதமர் மோடி, தான் சேகரித்த குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தார். 

பின்னர் இதுபற்றி டுவீட் செய்துள்ள பிரதமர் மோடி, ”பொது இடங்களை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க பொதுமக்க ளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள உறுதியேற்போம் என்றும்” அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.