வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீன ஜனாதிபதி  சி ஜின்பிங்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையேயான  2 ஆம் நாள் சந்திப்பு இன்று இடம்பெற்றது. 

இச்சந்திப்பு இன்று காலை கோவளத்தில் அமைந்துள்ள தாஜ் பிஷர்மேன் கோவ் ஹோட்டலில்  குண்டு துளைக்காத கண்ணாடி பேழை அறையில் காலை 11.05 மணியளவில் ஆரம்பமாகி 11.35 மணியளவில் நிறைவடைந்துள்ளது.

இதனை அடுத்து இரு தலைவர்களும் அதிகாரிகளுடன் இணைந்து  நடத்தும் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான  சந்திப்பிற்காக சீன ஜனாதிபதி சி ஜின்பிங் வெள்ளிக்கிழமை  சென்னையை சென்றடைந்தார். இதன் போது  சீன ஜனாதிபதி சி ஜின்பிங்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய உடையில் சீன ஜனாதிபதியை  வரவேற்ற இந்திய பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில்  "அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே! இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.