பாடசாலை மாணவர்களுக்கு எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு உதவும் வகையில் ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தலைமையில் கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சி 10ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த கண்காட்சியின் தொனிப்பொருளாக விசன் எக்போ 2019 (Vision Expo 2019) என பெயரிப்பட்டுள்ளதோடு, சுகாதாரம்,விவசாயம்,கலை மற்றும் கல்வி அடிப்படையில் நடைபெறுகின்றது.

மேலும் இக்கண்காட்சியில், அரச அதிகாரிகள்,பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து தமது ஆக்கங்களை காட்சிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.