(செ.தேன்மொழி)

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும். 

இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் தியதியிலிருந்து ஒவ்வொரு தலைப்பின் கீழ் எமது வேட்பாளர் கொள்கைகளை முன்வைப்பார். அதேவேளை 50 பேரணிகளையும், 250 கூட்டங்களையும் 3500 மக்கள் சந்திப்புகளையும் மேற்கொள்வதற்கான தீர்மானங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பு - பத்தரமுல்லவில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.