(ஆர்.யசி)

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற  விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு ஆறு மாதங்களாகின்ற நிலையில்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆராய விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. 

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் இது குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு கடந்த மே மாதம் 22 bஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டது. 

இக் குழு முதற்தடவையாக மே மாதம் 29 ஆம் திகதி கூடியிருந்ததுடன் இறுதியாக இம்மாதம் 17ஆம் திகதி கூடவுள்ளது. இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 24ஆம் திகதி விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்த எதிர்பார்த்திருப்பதாகவும்  பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.