வவுனியூர் ரஜீவனின் கவி வரியில் உருவான செஞ்சோலை உறவுகளின் துயரங்களை சுமந்து வரும் "செஞ்சோலையின் வலிகள்" என்னும் காணொளி பாடல் வெளியீட்டு விழா எதிர்வரும் 13/10/2019  ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள செஞ்சோலை மாதிரி கிராமத்தில் காலை 9.30மணிக்கு இடம் பெறவுள்ளது.

இவ் காணொளிக்கான பாடல்களை மறைந்த முன்னணி  பாடகர் எஸ்.ஜீ. சாந்தனின் மகன் சகிலன் பாடியுள்ளார். இப்பாடலுக்கான இசையை இசை கனல் பி.எஸ்.விமல் வழங்கியுள்ளார்.