சீன - பீஜிங்கில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த சீன ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இந்தியா-சீனா இடையே நல்லுறவை மேம்படுத்தக் கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீனா சென்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி. ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்தார்.
இதன் தொடர்ச்சியாகச் சீன ஜனாதிபதி இந்தியா வந்து பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடியும், சீன ஜனாதிபதியும் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச இரு நாட்டு அதிகாரிகளும் முடிவு செய்து கடந்த ஒரு மாதமாக ஏற்பாடுகள் செய்தனர்.
சீன ஜனாதிபதி ஜி. ஜின்பிங் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
சீன ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் வரவேற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM