மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘சங்கத்தமிழன்’ தீபாவளிக்கு வெளியாகாது என்று படத்தை வெளியிடும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

தீபாவளிக்கு தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படமும், கார்த்தி நடித்த ‘கைதி’ படமும் வெளியாகிறது. இதனுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘சங்கத்தமிழன்’ என்ற படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ‘சங்கத்தமிழன்’ தீபாவளிக்கு வெளியாகாது என்று செய்திகள் வெளியாகியிருக்கிறது. இது குறித்து படத்தை தமிழகம் முழுதும் வாங்கி வெளியிடும் உரிமை பெற்றிருக்கும் லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் தெரிவிக்கையில்,

“சங்கத்தமிழன் படம் தீபாவளியன்று வெளியாகாது. வீரம் படத்தின் பாக்கி குறித்து சேலம் விநியோகஸ்தர் ஒருவர் சங்கத்தமிழன் படத் தயாரிப்பு நிறுவனத்திடம் முறையீடு செய்திருக்கிறார். இது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும் போதிய படமாளிகை கிடைக்காத காரணத்தினால் சங்கதமிழன் தீபாவளியன்று திரையிடாமல் அதற்கு பதிலாக நவம்பர் மாதம் எட்டாம் திகதி அல்லது 15 ஆம் திகதி அன்று வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.” என்றார். 

தீபாவளிக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் படத்தை எதிர்பார்த்து காத்திருந்த அவரது ரசிகர்கள் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.