சுப்பர் ஸ்டாரின் அடுத்த பட அறிவிப்பு

Published By: Daya

11 Oct, 2019 | 02:26 PM
image

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து, அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

எந்திரன், பேட்ட ஆகிய படங்களைத் தொடர்ந்து, சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில், சன் பிக்சர்ஸ் புதிய திரைப்படமொன்றை தயாரிக்கிறது. இந்த படத்தை சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம்,  விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.

ரஜினிகாந்தின் 168 ஆவது படமாக தயாராகும் இந்தப் படத்திற்கு திரைக்கதை கிராம பின்னணியில் அமைந்திருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்திருப்பதால், சுப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க தற்போதே தயாராகிவிட்டார்கள்.

இதனிடையே சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது என்பதும், இயக்குநர் சிவா, சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37