Published by R. Kalaichelvan on 2019-10-11 14:41:40
(எம்.மனோசித்ரா)
கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எத்கால பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் இரு பெண்கள் மற்றும் அவர்களில் ஒருவருடைய மகள் ஆகியோர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக நேற்று காலை 10.30 மணியளவில் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய கொச்சிக்கடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு தாக்கப்பட்டதில் உயிரிழந்த பெண் 33 வயதுடைய எத்கால, கட்டான பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ள ஏனைய இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்யவதற்கான நடவடிக்கைகளை கொச்சிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.