எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி அமைதியான முறையில்   இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது வரை 50 சதவீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளன.

அத்துடன் இத்தேர்தல் தொடர்பான முடிவுகளை இன்று இரவு 10.00 மணிக்கு வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.