(செ.தேன்மொழி)

அஹங்கம பகுதியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொவியாய பகுதியில் நேற்று பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கப்புவத்தை பகுதியைச் சேரந்த 27 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து வெளிநாட்டு துப்பாக்கி ஒன்றும் மற்றும் இரு வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.