ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து கொழும்பு காலி முகத்திடலில் நேற்று நடைப்பெற்ற கூட்டத்தை அடுத்து துப்பரவு செய்யும் பணிகளில் மேயர் ரோசி சேனாநாயக்க தலைமையிலான அணி ஈடுபட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கான மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் விதமாக நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் முதலாவது பேரணியொன்று இடம்பெற்றது.

இதில் அதிகளவிலான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

இந்நிலையில் மக்கள் பயன்படுத்திய போத்தல்கள் , பொலித்தீன்கள் என்பன வீசப்பட்ட நிலையில் அதனை துப்பரவு செய்யும் பணியானது மேயர் தலைமையிலான அணி சுத்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.