(நா.தனுஜா)

மக்கள் தலைவரா அல்லது கொலைக்காரரா ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் எனத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

அத்துடன் நவம்பர் 16 ஆம் திகதி சஜித்துக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்குங்கள். நாம் பெற்ற பலத்தை பாதுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கொழும்பு - காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த சம்மேளனத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த தினத்திலிருந்து எதிர்தரப்பினர் முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாசவை விமர்சிக்க ஆரம்பித்திருக்கின்றனர். 

எனவே அவருடன் மிக நெருக்கமான அமைச்சராக சேவையாற்றிய அமைச்சர் என்ற அடிப்படையில் அவற்றுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அத்தோடு அவர்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்களை நிராகரிக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கிறது. ரணசிங்க பிரேமதாச உயிருடன் இருந்த காலத்திலும் இவர்களே அவரைத் தாக்கினர். தற்போது அவர் உயிரிழந்த பின்னரும் இவர்கள் தான் அவரைத் தாக்கி பேசுகின்றனர்.

இவ்வாறு தாக்கி பேசுகின்றார்கள் என்பதற்காக அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தப்படவில்லை. ரசணசிங்க மரணித்திருந்தாலும் அவரது பெயர் இன்றும் நிலைத்திருக்கிறது என்றார்.